வணக்கம்

ஸ்ரீலஸ்ரீ சத்குரு ஜெய்ராம் பிர்மயோகீஸ்வர மாணிக்க சுவாமிகள்

I'm known for my honesty and authenticity, and my viewers love me for it.

“When meditation is mastered,
The mind is unwavering like the
Flame of a lamp in a windless place.
In the still mind,
In the depths of meditation,
The Self reveals itself.
Beholding the Self
By means of the Self,
An aspirant knows the
Joy and peace of complete fulfillment.
Having attained that
Abiding joy beyond the senses,
Revealed in the stilled mind,
He never swerves from the eternal truth.”
― Bhagavad Gita

“You should perform your duty with a view to guide people and for universal welfare.” – Bhagavad Gita
01

சுவாமிகள் பிறப்பு / Birth of Swami:

தொண்டை வளநாட்டில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் திம்மாம்பேட்டை கிராமம் ஈஸ்வர நாம வருஷம் ஆனி மாதம் 1 ஆம் நாள் மகம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் அதிகாலை 6 மணிக்கு திங்கள் கிழமை சஷ்டி திதியில் (ஆங்கிலதேதி 16-06-1937 ஆம் ஆண்டு) தந்தை ஸ்ரீ ஸ்ரீ V.கிருஷ்ணசாமி நாயுடு மற்றும் தாய் கனகம்மாள் ஆகிய தம்பதியருக்கு மூத்த குமாரனாக அவதரித்த ஸ்ரீலஸ்ரீ சத்குரு ஜெயராம் பிரம்ம யோகீஸ்வர மாணிக்க சுவாமிகள்

Sreelasree Sadguru Jayaram Brahma Yogiswara Manikka Swami born as the eldest son of father Sri Sri V. Krishnasami Naidu and mother Kanagammal at Thondai Valanad, Vellore District, Vaniyambadi Circle,Thimmampettai Village on Eeswara Nama Year 1st day of Tamil month Aani, Monday at 6 am on Sashti Tithi (English date 16-06-1937)

சுவாமிகள் பிறந்த ஆறு மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் யோக மாயை காளிதேவி பன்னிரண்டு கைகளுடன் காட்சி அளித்தார்,மறுநாள் வெங்கடேச பெருமாள் காட்சி அளித்தார், மூன்றாம் நாள் குழந்தையுடன் விளையாட எண்ணிய காளிதேவி சுழல் காற்றாய் மாறி பன்னிரண்டு அடி உயரம் தூக்கிச் சென்று மறுபடியும் கீழே இறக்கினாள் இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்

One day six months after the birth of the Swami, Goddess Kali Appeared before Swami with her twelve hands and blessed the Baby, and the next day Lord Venkateshwara Appeared before Swami. On the third day,Goddess Kali, who was about to play with the child, turned into a whirlwind and took the child twelve feet high and descended again. Everyone was amazed to see this

02

பள்ளி பருவம் / School Time

ஐந்தாம் வயதில் மாணிக்க சுவாமிகளின் பெற்றோர் சேஷகிரி ஆச்சாரியர் குருகுலத்தில் சுவாமிகள் சேர்த்தனர்.குருகுலத்தில் முதன்மை மாணவராக திகழ்ந்தார் சேஷகிரி ஆச்சாரியர் ராமாயண கதைகள் சொல்லும் போது அதைக் கேட்டு மெய் மறந்து போவார் மாணிக்க சுவாமிகள்.ராமாயணம் மகாபாரதம் போன்ற மகா காவியங்களை கற்றுக் கரை சேர்ந்தார்.ராம பஜனை எங்கு நடந்தாலும் அங்கு அனுமனைப் போல் சென்றுவிடுவார். சுவாமிகள் தாத்தா அவரை ராம பஜனைக்கு அழைத்துச் செல்வார் அதனால் அவர் ராமன் மீது தீராத பக்தி கொண்டார்,ராம பஜனை எங்கு நடந்தாலும் அங்கு சென்று விடுவார் மறுபடியும் வீட்டுக்கு வர வெகு நாட்கள் கூட ஆகலாம்.

At the age of five, Manika Swami's parents enrolled him in the Seshagiri Acharya Gurukul. He was the primary student in the Gurukul. When Seshagiri Acharya narrates the stories of Ramayana Manika Swami listens to it without any distraction. He learned great epics like Mahabharata and Ramayana with great intrest towards it very quickly. Swamiji's grandfather would take him to Rama Bajan so he had unwavering devotion to Lord Rama. Like Lord Hanuman manikka swamiji will go to the places wherever the ram bajan is conducted.Sooner swamiji started frequently going out of home to listen ram bajan and it may take many days to come home again.

மாணிக்க சுவாமிகள் தனது பத்தாம் வயதில் பக்தியின் திருவடிவாகவே மாறிவிட்டார். அடிக்கடி தனிமையில் சென்று தியானத்தில் அமர்ந்து விடுவார் பிறகு தனது குருவான சேஷகிரி ஆச்சாரியாரிடம் சென்று கடவுளை காண என்ன வழி என்று கேட்பார். மாணிக்க சுவாமிகளின் மன திடத்தை கண்ட சேஷகிரி ஆச்சாரியார் அவருக்கு ஞான உபதேசம் செய்தார்.ஞான உபதேசம் பெற்ற மாணிக்க ஸ்வாமிகள் தவத்தில் ஈடுபட்டார்.

He often goes alone and sits in meditation.Then he goes to his guru Seshagiri Acharya and asks what is the way to see God. Seeing the mental strength of manikka swamiji Seshagiri Acharya taught him the way to wisdom.Then Swamiji was engaged in meditation.

மாணிக்க சுவாமிகளின் 14ஆம் வயதில் வெளி மாநிலத்தை சேர்ந்த சித்த யோகிகளை சேஷகிரி ஆச்சாரியர் அறிமுகம் செய்தார்.அவர்களிடமிருந்து அஷ்டமா சித்திகளையும் உபதேசம் பெற்று பயிற்சியும் மேற்கொண்டார். தனது பதினாறாம் வயதில் பூமிக்கு அடியில் அன்ன ஆகாரமின்றி 48 நாட்கள் காற்றை மட்டுமே சுவாசம் செய்து கடுந்தவம் இயற்றினார் அதில் வெற்றியும் கண்டார்.

Seshagiri Acharya introduced the Siddha Yogis from other state to Manika Swami at the age of 14.From them Swami got Ashtama Siddhis also received training to excel them and succeded to master it. At the age of 16 Swamiji was in meditation for 48 days without food under the ground. He breathed only air and composed austerities in which he found success.

பின்பு உடல் பாகங்களை தனித்தனியே பிரித்து சித்து விளையாடினார் இதை கண்ட சிலர் வெளியே கூறவும் மாணிக்க சுவாமிகளை காண அடியவர் கூட்டம் பெருகியது.தனிமையில் தவம் செய்ய எண்ணிய அவர் இரவோடு இரவாக ஆந்திர மாநிலத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியான பொக்கில்ரேவ்வில் தனது தவ வாழ்க்கையை சிலகாலம் தொடர்ந்தார்.அதன் பிறகு மீண்டும் 90 நாள் பூமிக்கு அடியில் தவம் இயற்றி வெற்றி கண்டார் .பத்தொன்பது வருட காலம் வனத்திலேயே தங்கியிருந்து நாராயண சுவாமி ஆலயம் நிறுவினார் அங்கு வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
Then Swamiji played the Sidhu by disassembling the body parts separately(which is popularly called as Kanda Yogam in Yogic culture) at a hidden place. Few people who saw this miracle quickly spreaded the news to the near by villages. The crowd of devotees grew to see the Manika Swami all of a sudden. Desperate for penance in solitude swamiji went to a forest at andrapradesh called Boggilrave and He continued his monastic life for some time in the dense jungle

1954-ஆம் ஆண்டு மாணிக்க சுவாமிகளின் தந்தை-தாயாருக்கு உடல்நலம் குன்றவே வனம் விட்டு ஊர் திரும்பினார். சிலகாலம் சென்றபின் ஆவாரம்குப்பம் கிராமத்தில் பாலாறு என்னும் பார்வதி நதியும், மன்னாறு என்னும் சரஸ்வதி நதியும் ,பூமியின் அடியில் இருந்து தோன்றும் லட்சுமி நதியும் சங்கமிக்கும் முக்கூடல் தென்கரையில் சைவம் வைணவம் இரு கண்களாக கொண்டு திருமால் முருகன் திருக்கோவில் தேவஸ்தானம் நிறுவினார். பின்பு கோவிலை எழுப்பும் முன் கருவறையில் சுரங்கம் அமைத்து அறுபத்தி மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி தவமியற்றினார். தவத்தின் பயன் அனைத்தும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிடைக்கும் வண்ணம் அருள் செய்தார்.

மூலவராக கனகலட்சுமி ஜெயலட்சுமி சமேத ஆனந்த பத்ம நாராயணரையும், வலது புறத்தில் சுயம்புமூர்த்தியாக மார்க்கண்டேஸ்வர சுவாமியும், இடதுபுறத்தில் பாலசுப்பிரமணிய சுவாமியும் ஒருங்கே அமைத்து சிவ கேசவ பேதமின்றி அனைவரும் திருவருள் பெற வழி செய்தார். ஆறு சமயத்தினரும் அருள் பெறும் வண்ணம் வைணவம் விளங்க ஆனந்த பத்ம நாராயணரையும்,சைவநெறி தழைக்க மார்க்கண்டேஸ்ரையும், கௌமாரம் திகழ பாலசுப்பிரமணியரையும், சாக்தம் புகழ்பெற யோகமாயா ஈஸ்வரியும், காணாபத்தியம் போற்றும் கணேச மூர்த்தியையும், சௌரம் ஒளிபெற சூரியனையும் இத்திருக்கோவிலில் ஒருங்கே அமைத்தார் இத்திருக்கோவிலில் கலியுகத்தில் அவர் தம் தவவலிமையால் நவகிரகங்களை மாற்றி அமைத்து இங்கு வரும் பக்தர்களுக்கு சகல ஐஸ்வரியங்களையும் பெற்றுத் தருகின்றார் ஸ்ரீலஸ்ரீ சத்குரு ஜெயராம் பிரம்ம யோகீஸ்வரர் மாணிக்க சுவாமிகள்.

03

சுவாமியின் ஜீவசமாதி / Jeevasamadhi of Swami

1999ஆம் வருடம் ஸ்ரீலஸ்ரீ சத்குரு ஜெயராம் பிரம்ம யோகீஸ்வரர் மாணிக்க சுவாமிகள் நிறுவிய திருமால் முருகன் திருக்கோவில் தேவஸ்தான கும்பாபிஷேகம் இரண்டாம் முறையாக அவர்தம் தலைமையிலேயே நடைபெற்றது. அப்போது அவர் தம் ஆன்மாவை இறைவனடிக்கு அர்ப்பணிக்க திருவுள்ளம் கொண்டார் அவ்வுண்மை யாரும் அறியாவண்ணம் திருவிளையாடல் செய்தார். பெப்ரவரி 14, 1999, ஞாயிற்றுக்கிழமை ( மாசி 2, வெகுதானிய ஆண்டு ) கொடியேற்றம் செய்து கும்பாபிஷேகம திருவிழா தொடங்கி வைத்தார். பெப்ரவரி 15, 1999, திங்கட்கிழமை( மாசி 3, வெகுதானிய ஆண்டு) பாலசுப்பிரமணிய சுவாமி உற்சவத்தை நடத்தி வைத்தார். பெப்ரவரி 16, 1999, செவ்வாய்க்கிழமை( மாசி 4, வெகுதானிய ஆண்டு ) அன்று மட்டும் கும்பாபிஷேக பத்திரிக்கையில் விடு பட்டிருப்பதை கண்ட பக்தர்கள் மாணிக்க சுவாமியிடம் கேட்டபோது சிரித்துக்கொண்டே அன்றுதான் மிகப்பெரிய பூஜை நடக்கும் என்று கூறினார். அவர் தம் சீடரிடம் மட்டும் கூறிய படி அதிகாலையில்பஞ்ச இந்திரியங்களையும் அடக்கி மூச்சை தனக்குள் ஒடுக்கி சமாதி நிலைக்குச் சென்றார். பின்னர் நாள் முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டார். அப்போது அவர் முகத்திலும் உடலிலும் முத்து முத்தாக வியர்வை துளிகள் வருவதை கண்டு பக்தர்கள் அதிசயித்தனர். ஆறு மணி அளவில் அவர் சீடர் மாணிக்க சுவாமிகள் செவிகள் அருகே சென்று ஜீவ சமாதிக்கு அனுமதி வேண்டினார். அதற்கு அருள்திரு ஸ்ரீலஸ்ரீ சத்குரு ஜெயராம் பிரம்ம யோகீஸ்வரர் மாணிக்க சுவாமிகள் புருவங்களை அசைத்து அனுமதித்தார் இதைக் கண்ட பக்தர்கள் சுவாமிகள் உயிருடன் இருக்கிறார் என்று அவரை ஜீவசமாதி செய்யக்கூடாது என்றும் ஆர்ப்பரித்தனர். இருப்பினும் சுவாமிகளின் சீடர் அவர் பரமபதம் அடைந்தார் என்று கூறி கோவில் வளாகத்திலேயே உள்ள வடக்கு மண்டபத்தில் சமாதி குழிக்குள் இறக்கி ஜீவசமாதி செய்தார். பின்பு,பெப்ரவரி 17, 1999, புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் 11 மணி அளவில் சுவாமிகள் ஜீவ சமாதிக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்ட போது விளக்கு அணைந்தது. அப்போதுதான் அருள்திரு ஸ்ரீலஸ்ரீ சத்குரு ஜெயராம் பிரம்ம யோகீஸ்வரர் மாணிக்க சுவாமிகள் இறைவன் திருவுளப்படி பரமபதம் சென்றடைந்தார் என்று பக்தர்கள் உணர்ந்தனர். அன்று முதல் குருவருளும் திருவருளும் இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ சத்குரு ஜெயராம் பிரம்ம யோகீஸ்வரர் மாணிக்க சுவாமிகள்.

Devasthanam Kumbabhishekam in Tirumal Murugan Temple established by Shrisree Satguru Jayaram Brahma Yogiswarar Manika Swami in 1999 It was held under his leadership for the second time. Then he decided to dedicate his soul to the Lord He played a game without anyone knowing about it. On February 14, 1999, Sunday (Masi 2, Vekudaniya year) he hoisted the flag and inaugurated the Kumbabhishekama festival. On February 15, 1999, Monday (Masi 3, a leap year), Balasubramanya Swamy conducted the Utsavam. Devotees who saw that Kumbabhisheka was released in the newspaper only on February 16, 1999, Tuesday (Masi 4, Vekudaniya year). When Manika asked Swami, he smiled and said that the biggest pooja would take place on that day. As he had told his disciple only, early in the morning he subdued the senses He held his breath and went into a state of trance. He was then kept for darshan by devotees throughout the day. Then he saw beads of sweat falling on his face and body The devotees were amazed. At six o'clock he went to the ears of the disciple Manika Swami and asked for permission for the Jiva Samadhi. For that Arulthiru Srilashri Satguru Jayaram Brahma Yogiswarar Manika Swami moved his eyebrows and allowed the devotees who saw this Swami They also demanded that he should not be cremated as he is alive. However, the Swami's disciple claims that he attained Paramapadam in the north hall of the temple complex itself He lowered himself into the Samadhi pit and took Jivasamadhi. Then, on Wednesday, February 17, 1999, the Maha Kumbabhishekam was held with much fanfare. Then at 11 o'clock when the Aarti was performed at Swami's Jeeva Samadhi, the lamp was switched off. It was then that the devotees realized that Arulthiru Srilashri Satguru Jayaram Brahma Yogiswarar Manika Swami had reached Paramapadam by the Lord Thiruvula. From that day, Guruvaru and Thiruvaru have been providing wari to the devotees who come to this temple.

Subscribe to my newsletter
Let's talk

Want to Collaborate?

Aliquam felis ex, viverra et commodo euismod, dignissim et eros. Integer efficitur sem neque, id rutrum diam aliquet et. Fusce porta quam quis felis ultricies.